மணிமங்கலம் மாயோன் - 2
கோவில் முகப்பு
ஆனந்த் குறிப்பிட்ட அந்த இயற்கை எழிலான இடத்தில் சில நேரம் செலவழித்து விட்டு அருகில் உள்ள மணிமங்கலம் தர்மேஸ்வரர்
கோவிலுக்கு சென்றோம். ஆனால் நேரம் ஆகிவிட்ட படியால் கோவில் பூட்ட பட்டு இருந்தது. சரி இரு முறை தரிசனம் தராத ராஜகோபாலன் இந்த முறை தரிசனம் தருவாரா என ஒரு வித சந்தேகத்துடனேயே கோவிலை நாடி சென்றோம்.
கொடிமரமும் சன்னிதானமும்
திருநாராயனன் - மேல்கோட்டே-கர்நாடகா.
மாயவன் அருள் பொங்க ஆலயத்தை திறந்து வைத்திருந்தான். அன்று விஜயதசமி, ஆலயத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவடைந்து
கொண்டிருந்தன. இந்த ஆண்டு தான் தாயருக்கு நவரத்திரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியதாக மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.ரவி (டி.வி. மெக்கனிக், இப்படித்தான் அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்) அவர்கள் தெரிவித்தார். மனதில் பரவசம் பொங்க மயவனை நோக்கி ஏரக்குறைய ஒடினேன், ஆஹா நான் கண்ட காட்சி என்னால் முழுமையாக விவரிக்க இயலாதது, இதுவே ஆழ்வார்களாக இருந்தால் “அமலனாதிபிரான்” போல ஒரு பத்து பாசுரங்கள் பாடி பகவானுடன் ஐக்கியமாகி இருப்பார்கள்.
ஆராவமுதன், மாயவன், உள்ளம் கவர் கள்வன், ஸ்ரீமன் நாராயனன், வலக்கையில் சங்கமும், இடக்கையில் சக்கரமும், வலது கரம் அபயமாகவும் இன்னொரு கையில் கதாயுதத்துடனும், மேல்கோட்டே திருநாராயண பெருமாளை நினைவூட்டும் திருக்கோலத்துடன் சுமார் ஐந்தடி அல்லது ஆறு உயரத்தில் அருள்பாலிக்கிறான். தரிசித்த மாத்திரத்தில் மனதெல்லம் நிறைவானதொரு உணர்வு. இது போன்ற உணர்வு காஞ்சி பேரருளானை(வரதராஜன்)பார்த்த போது தான் எனக்கு வந்தது.
முன் மண்டபமும் கருடன் சன்னிதியும்
தாயார் சன்னிதி
சிவன் சன்னிதிகளில் தான் சுற்று சுவர்களில் பிற தெய்வங்களின் சிலைகள்(கோஷ்ட்ட தெய்வங்கள்-தட்சினாமூர்த்தி,விஷ்ணு, துர்கை,லிங்கோத்பவர்...) பிரதிஷ்டை செய்து இருப்பார்கள். இந்த பெருமாள் சன்னிதனத்தில் அதிசயமாக கோஷ்ட்ட தெய்வங்கள் அமைக்கபட்டிருக்கின்றன அதுவும் வித்தியாசமாகஒரு பெரிய சிலை அதன் மேல் பகுதியிலே ஒரு சின்ன தெய்வ வடிவம். இடமிருந்து வலம் வரும்போது முதலில் இருக்கும் தெய்வம் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் கணபதி, அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே தட்சினாமூர்த்தி. அடுத்து ப்ரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் மஹாவிஷ்ணு அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே கையில் வெண்ணை வைத்துக்கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடும் நவனீதகண்ணன். மேற் சொன்ன இரு தெய்வங்களும் சன்னிதானத்தின் தெற்க்கு சுவற்றில். பின்புற சுவற்றில் மறுபடியும் ப்ரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் மஹாவிஷ்ணு அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே யோக நரசிம்மர்.
ஆண்டாள் சன்னிதி
நல்லாட்டூர் வீர ஆஞ்சநேயர்
சன்னிதானத்தின் எதிரே சற்றே வடகிழக்கில்(சனி மூலை?) சுமார் 2.5-3 அடி உயரத்தில் வீர ஆஞ்சனேயர். இந்த ஆஞ்சனேயர் திருத்தணி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள நல்லாட்டூரில் அருள் பாலிக்கும் ஆஞ்சனேயர் தோற்றத்திலேயே உள்ளார். ராஜகோபாலனை போலவே இந்த ஆஞ்சனேயரும் மிகவும் சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார்.
ஆலய மணியும் கோவில் சுவர் கல்வெட்டும்
யதிராஜர் ராமானுஜர்
சரியாக வட கிழக்கு மூலையில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சந்நிதி. சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், யதிராஜர் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் அருள்கின்றனர். மணிமங்கலத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருபெரும்பூதூரில் பிறந்த வைணவ குல திலகம், அடியார்களின் அரசர், யதிராஜர் ராமானுஜர் இந்த திரு தலத்திற்க்கு அவரது காலத்தில் வந்து வழிபட்டபோது மாயவன் அவருக்கு ராஜகோபாலனாக காட்ச்சி அளித்ததாகவும் அப்போதிலிருந்து இந்த இறைவன் ராஜகோபலானக அழைக்கபடுவதாகவும் கோவிலும் ராஜகோபலா சுவாமி கோவில் என அழைக்க படுவதாகவும் செவி வழி செய்தி. இந்த செய்தி மற்றும் சன்னிதனத்தில் இருக்கும் கல்வெட்டு இவற்றை கொண்டு பார்க்கும் போது இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானதாக(தஞ்சை பெரிய கோவிலைவிடவும்) இருக்கவேண்டும் என தெரிகிறது. பெரியார் மழலையர் தொடக்க பள்ளியும் ஆலயமும்
அறிவும் ஆன்மீகமும்
இந்த கோவிலை பற்றியும், மணிமங்கலம் கிராமத்தை பற்றியும் சுமார் 2 மணி நேரம் மிகவும் அழகாகவும், பல்வேறு விஷயங்களையும் மேற்கோள் காட்டியும் பொறுமையுடன் விளக்கி சொன்ன திரு.ரவி அவர்களுக்கு நான் எவ்வளவு நண்றிகள் சொன்னாலும் பத்தாது. இன்னும் இரண்டு பெருமாள் கோவில்களையும் சிவாலயங்களையும் தரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவற்றை பற்றியும் எழுதுவேன். சென்னைக்கு அருகே இருக்கும் அனைவரும் ஏன் உலகில் இருக்கும் அனைவருமே வந்து இயற்கை எழிலை ரசித்தும் இறைவன் அருளைய பெற்றும் மகிழ்ந்திக்க வேண்டும்மாறு ராஜகோபாலன் அருள்வானாக.
குறிப்பு: - சென்னை தம்பரத்தில் இருந்து 55N(தமிழ்நாடு அரசு பேருந்து), 583c(மாநகர பேருந்து) ஆகிய பேருந்துகள் மணிமங்கலம் செல்லும்,
மணிமங்கலத்தில் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கே விசாரித்தாலேயே கோவிலுக்கு வழி சொல்வார்கள், நடக்கும் தூரம் தான்.
6 comments:
இந்த விஷயங்களை பற்றி எழுத ஊக்கமளித்த தம்பி கண்ணனுக்கு நன்றிகள்.
Its amazing experience to visit the temple on the vijayadasami naal. I saw so many temples in Chennai and tamilnadu but nobody explain about temple like this. Mr.Ravi explain about the temple is awesome. So many many thanks to Mr.Ravi.
I am living near to this temple area but haven't visited. Your blog kindled my interest :) Waiting to see perumal..Can you also pls mention that "Iyarkai ezhilaana idam" near to that manimangalam?
"Iyarkai ezhilaana idam" was before 4 years, that is between Manimangal and Karasangal.
Excellent narration. I am planning to visit Manimangalm, can you please provide me with Mr. Ravi's contact details.
Article is almost 7 Years Old, Mr.Ravi is not in Contact with Temple. you can contact Temple Priest(Lives in the same street where temple is located)
Post a Comment