Wednesday, October 27, 2010

காண கிடைக்காத பெருமான்.

காண கிடைக்காத பெருமான்


ரமனா சரணம் சரணம். இது ”இசைஞானி”  என உலகம் புகழும் உன்னத கலைஞன் அருணமலை குரு ரமனன் மீது கொண்ட மட்டற்ற அன்பினால் எழுதி இசை அமைத்து படிய பாடல்களின் தொகுப்பு. முற்றிலும் தன் செலவிலேயே இந்த இசை தொகுப்பை தயாரித்து ரமனாஸ்ரமத்திற்க்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் இளையராஜா. ரமனாஸ்ரமும் இந்த இசை தொகுப்பை மிகவும் குறைந்த விலைக்கே(ஐம்பது ரூபாய்) விற்பனை செய்கின்றார்கள். இதன் ஒவ்வொரு பாடாலும் ஆழ்ந்து கேட்க்கும் போது அமைதியான மன நிலைக்கு நம்மை ஆழ்த்தும்.

மொத்தம் 10 பாடல்கள், ஒரு பாடல் “பாபநாசம் சிவன்” பாடலான ”எப்படி பாடினாரோ”  மெட்டில் இளையராஜ வரிகளில் பாடபட்டுள்ளது. ஒரு பாடல் தெலுங்கு கீர்த்த்னைபாக உள்ளது. தன் மகள் பவதாரிணியுடன் சேர்ந்து  “ஆராதருமருந்து”  என்று ஒரு பாடல் பாடியுள்ளார் ராஜ, அழகான பாடல்.

”பரம் பொருள் தானோ அருணாசலம்” என்ற பாடல் சென்ற ஆண்டு வெளி வந்த “நான் கடவுள்” படத்தின் தொடக்கத்தில் வரும் ”மா கங்கா” என கங்கையின் புகழ் பாடும் பாடல் மெட்டில் உள்ளது.  படத்தில் வந்த பாடல் முந்தையதா அல்லது இந்த இசை தொகுப்பு முந்தையதா என தெரியவில்லை.  எப்படி இருந்தாலும் இசை இளையராஜா தானே.

”நீங்க அண்ணாமலைக்கு” என்ற பாடலில் இன்றைய சாமியார்களின் லட்ச்சனம் பற்றி சொல்லி இருப்பார், உன்மையான குரு எப்படி இருப்பார் என்பதையும் பதிவு செய்துள்ளார். 

”மாயையில் ரமண மாயன்” பாடல் வஞ்ச புகழ்ச்சி போல அமைந்துள்ளது. இந்த தொகுப்பில் எனது மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றை மட்டும் இங்கே தருகிறேன்.  அந்த பாடலானது :



காண கிடைக்காத பெருமான்




காண கிடைக்காத பெருமான் ரமனன், கண்கள் கொண்டு கண்டாலும், கோடி கண்கள் கொண்டாலும்,

காண கிடைக்காத பெருமான் ரமனன்,

கருத்தினில் இருத்தி கருதி கருதிட கருத்தழிப்பான்

கருத்தழிந்தே போனால் காண் பொருளும் ஏது காண்பானும் தான் ஏது

காண் பொருளும் காண்பானும் அவனாகும் வேறன்றி அறிவு விழி  திறந்து அதன் மூலம் கண்டாலும்

காண கிடைக்காத பெருமான் ரமனன்,

அரியோடு பிரம்மனும் அடி முடிதனை  தேடி அடங்க வைத்தான்

அவர்காக அவன் இறங்கி ரமன வேடம் கொண்டு அடி முடி காண் என்றான்.

கை தொழுது கண்டாலும் கானும் அவன் மெய்யாமோ

பொய் வேடம் மூலம் நம்முள் மெய் காட்டும் மெய்யன் அவன்

காண கிடைக்காத பெருமான் ரமனன்,

காண கிடைக்காத பெருமான் ரமனன், கண்கள் கொண்டு கண்டாலும், கோடி கண்கள் கொண்டாலும்,

காண கிடைக்காத பெருமான் ரமனன்.

-------------------------------------------------

பாடல் தொகுப்பை அனைவரும் கேட்டு அருளானந்தத்தை அடைய வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

No comments:

Post a Comment