Sunday, October 24, 2010

மணிமங்கலத்து மாயவன்-1

மணிமங்கலம், சென்னை தாம்பரம் அருகே அமைந்துள்ள அழகான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர் கிராமம். ஏழாம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்கள் சாளூக்கியர்களோடு போரிட்ட இடம். கல்கி அவர்களின் ”சிவகாமியின் சபதம்” புத்தகத்தில் கூட குறிப்பிட பெற்றிருக்கும்(மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்-முப்பத்தோராம் அத்தியாயம் - புலிகேசி ஓட்டம்- மணிமங்கலம் போர்க்களத்தில் மகேந்திர பல்லவரின் சிறு படை, அடியோடு நாசம் செய்யப்படவிருந்த தறுவாயில், மாமல்லரும் பரஞ்சோதியும் பாண்டியனைப் புறங்கண்ட குதிரைப் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் போர் நிலைமை அடியோடு மாறி விட்டது. சளுக்க வீரர் பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர்.).


இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மணிமங்கலத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் ஆறு. மூன்று சிவன் கோவில்கள் மூன்று பெருமாள் கோவில்கள்.

தர்மேஸ்வரர், கைலாசநாதர்,வ்யாலீஸ்வரர் ஆகியவை மூன்று சிவன் கோவிலகள். இவற்றுள் வ்யாலீஸ்வரர் கோவில் இன்றி வெரும் லிங்கமாக மட்டும் பொதுமக்கள் எளிதில் அறிய முடியா இடத்தில் இருக்கிறார், கைலாசநாதர் கோவில் தற்போது புணரமைக்க பட்டு வருகிறது. தர்மேஸ்வரர் கோவில் ”தொல்பொருள் துறை”யினர் கட்டு பட்டில் உள்ளது. தினமும் ஒரு கால பூஜை மட்டும் அர்ச்சகரின் நேரப்படி நடக்கிறது. கோவில் மாலை 4-5 மணி அளவில் மட்டும் திறந்திருப்பதாக தகவல்
கோவில் வெளிப்புறத்தோற்றம் 
 வெளி வாயிலும் பிரதான வாயிலும்


இந்த கோவிலுக்கு இது வரை 3 முறை சென்றுறிக்கிறேன், இரு முறை தரிசனம் செய்து இருக்கிறேன். இறைவன் லிங்க வடிவில் ”கஜப்ருஷ்ட்ட விமானம்” எனப்படும் ”துங்காணை மாடத்தின்” கீழ் வீற்று இருக்கிறான், மிகவும் அற்றல் நிறைந்த கோவில் என்பதால் இறைவனுக்கு எதிரில் சாளரம் அமைக்க பட்டுள்ளது. பொதுவாக கோவில்களில் வாயிலை தாண்டி கொடிமரம்,பின்னர் நந்தி, துவாரபாலகர்கள் இறைவன் சந்நிதி என இருக்கும், ஆனல் இங்கோ பலிபீடமும் நந்தியும் கோவிலுக்கு வெளியே.
 கோவிலுக்கு வெளியே பலிபீடமும் நந்தியும்
 சாளரம்

பிரதான வாயில், பின்னர் சில படிகள் ஏறி ஒரு மண்டபம் மண்டபத்தின் உள்ளே நுழைந்து இடது புறம் போனால் சந்நிதி,அங்கே ஈசன். இறை ஆற்றலை நேரடியாக தங்க எல்லோராலும் முடியாது என இவ்வாறு ஏற்பாடு என தெரிவித்தனர். மிக சில கோவில்களிலேயே இத்தகைய ஏற்பாடு இருக்குமாம். இது போல நான் பார்த்த இன்னொரு கோவில் திருநீர்மலை அடிவாரத்தில் உள்ள நீர்வண்ண பெருமாள் கோவில்(திருமலை நாதன் தோற்றத்தில் இருப்பார்). இவ்வளவு ஆற்றல் வாய்ந்த தர்மேஸ்வரர், அடியார்கள் வரவின்றி தனிமையில் தொல்பொருள் துறை கட்டுபாட்டில் உள்ளார்.

 கஜ ப்ருஷ்ட்ட விமானம்-துங்கானை மாடம்
 கோவிலின் சுற்று தோற்றம்

 கோபுரமும் கோமுகியும்

 அம்பாள் சந்நிதி(தனிக்கோவில்)
 ஆலய சுவற்றில் கல்வெட்டும் தனியே நிற்கும் சிற்பங்களும்

தனியே நிற்க்கும் கல்வெட்டு

இந்த கோவிலை படம் பிடித்து பிரபலப்படுத்த நினைத்த ”மக்கள் தொலைக்காட்சி” யினரையும் அங்கிருந்த தொல்பபொருள் துறை காவலாளி விரட்டியதாக ஊர் மக்கள் சொன்னார்கள்.


.

2008ம் ஆண்டு சென்றபோதும் இந்த ஆண்டு 2ம் மாதம் சென்ற போதும் பெருமாள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியவில்லை, முதல் முறை ஒரு பெருமாள் கோவில் தான் இருப்பதா தெரியும்.

ராஜகோபால ஸ்வாமி ஆலயம், முதல் முறை சென்ற போது சந்நிதிகள் பூட்டி கிடந்தன, கோவிலை மட்டும் சுற்றறி பார்த்து வந்தோம். அதன் பின்னர் எனது தாயாரின் சகோதரி அவர்கள் ஒரு முறை சென்று பெருமாளை தரித்து விட்டு புகழ்ந்த்து கொண்டிருந்தார், அவர் சொல்லி தான் அங்கே 2-3 பெருமாள் கோவில்கள் உள்ளன என்பது தெரிய வந்தது.

கேள்விப்பட்ட நாள் முதல் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற என்னம் அவ்வப்போது மனதில் வந்து கொண்டிருக்கும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீடிரென ஒரு நாள் புறப்பட்டு சென்றேன், ஆனால் தர்மேஸ்வரர் தரிசனம் மட்டுமே கிடைத்தது. மாயவன் சித்தம் வேறாக இருந்த்தது. அர்ச்சகர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார். நானும் மாயவனை காண முடியா வருத்ததுடன் திரும்பிவிட்டேன்.

தொடரும்....

குறிப்பு:- தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல சிவாலயங்கள்(மாடம்பாக்கம்,சோமங்கலம், மணிமங்கலம்...) கஜப்ருஷ்ட்ட விமானம் எனப்படும் துங்காணை மாடத்தின் வடிவிலேயே அமைக்க பட்டுள்ளன, காரணம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

2 comments:

Devotee said...

http://www.dharsanam.com/2009/03/manimangalam-sri-dharmeswarar.html

See this also

Anonymous said...

http://temple.dinamalar.com/New.aspx?id=227

dinamalar tells about the temple

Post a Comment