Sunday, December 26, 2010

பழைய சீவரம்-ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹர்.

மனித இனத்தின் நாகரீகம் தோன்றியது நதிக்கரைகளில் தான் என்பது வரலாறு. பண்டைய நாகரீக வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே அமைந்தன கோவில்கள். அது போல செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலாற்றின் கரையில் அமந்துள்ளது பழைய சீவரம் கிராமம்.  புராண பெயர்ப்படி ”ஸ்ரீபுரம்”. ஸ்ரீபுரம் காலப்போக்கில் மருவி சீவரம் ஆனாதாக ஒரு கருத்து உண்டு. மிகவும் பழமையான ஊர் ஆதலால் பழைய சீவரம்.


 ஆலய கோபுரம்


பாலாற்றின் கரையிலே ஒரு சிறு குன்று, அந்த குன்றின் மேலே சற்று தூரத்தில் ஒரு அழகிய ஆலயம். ஆலயத்தின் மூல மூர்த்தி “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள்”. இந்த ஆலயம் அமைந்திருக்கும் குன்றின் புராண பெயர் ”பத்மகிரி”யாம். புராண வரலாற்றையே சற்று பார்ப்போம் இப்போது.



ஆலய முகப்பு

நைமிசாரண்யம் என்னும் இடத்தில் பல முனிவர்களும் ரிஷிகளும் கூடி இருக்கும் வேளையிலே ”விஷ்ணுசித்தர்” என்னும் முனிவர் ஒரு கேள்வி எழுப்புகிறார், ஸ்ரீமன் நாராயணனை ”அர்சை” ரூபத்தில் தொழுது முழுமையான பலன் பெற ஏதேனும் ஒரு தலம் உள்ளதா என. இதற்கு பதிலளிக்கும் ”மரீச” முனிவர் அவ்வாறு ஒரு தலம் உள்ளது, அங்கே தொழுபவர்களுக்கு பெருமாள் முழுமையான பலனை தந்த வரலாறும் உள்ளது என சொல்கிறார்.



 கோபுர விமானமும் ஆலய விமானமும்
 அந்த தலம் தான் இந்த பழைய சீவரம். நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில்ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹரை நினைத்து தவம் செய்து கொண்டிருந்த அத்திரி முனிவருக்கும் அவர் மனைவி அனுசுயைக்கும் நெடு நாட்கள் ஆகியும் பெருமான் காட்சி கொடுக்க வில்லை. அதனால் அவர்கள் தங்களது தவத்தை அதிகரித்த வேளயிலே பெருமான் அவர்களுக்கு ஒலித்து ஒரு செய்தி சொல்கின்றான், தென்திசை நோக்கி சென்று பாலாற்றின் கரையிலே அமைந்துள்ள பத்மகிரியில் கிழக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தால் தான் காட்சி தருவதாக.

அதன் படியே இங்கே வந்து தவம் செய்த அத்திரி முனிவரின் தவத்தை உகந்த பெருமாள் ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹ ரூபத்தில் மேற்கு நோக்கியவாறு அத்திரி முனிவருக்கு காட்சி அளிக்கிறார். அப்படியே அத்திரி முனிவரின் வேண்டுகோளின் படி அங்கேயே ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹ ரூபத்தில் தங்கிவிடுகிறார் என்கிறது “பிரம்மாண்ட புராணத்தின் 17ம் அத்தியாயம்.

கொடிமரமும் படிகளும்

தூனிலும் துரும்பிலும் என்னிலும் உன்னிலும்

 ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹ பெருமாள் சுமார் 6 அடியில் ஸ்ரீ மஹலக்ஷ்மியை தன் மடியிலே இருத்திக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பொங்க காட்சி அளிக்கிறான்.  வெகு அழகாக நேர்தியாக பரமரிக்க படும் திருக்கோவில். தனியே அஹோபில வல்லி தாயார் சந்நியும் உன்டு.

 படிகளிலிருந்து ஆலயமும் படிகளும்
 இவ்வாலயத்தில் இருந்து சற்று மேலே சுமார் 100-150 படிகள் ஏறி சென்றால் ஒரு மண்டபம் உள்ளது, அந்த மண்டபத்தில் இருந்து சற்று தொலைவில் மிகவும் பாழடைந்த நிலையில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இந்த பத்மகிரி என்னும் குன்று மூலிகைகள் நிறைந்ததாக கருதப்படுகிறது.
 திருக்குளம் -ஆலயம் -ஆறு


படிகளின் முடிவில் இருந்து வரதர் தங்கும் மண்டபம்

 இந்த பழைய சீவரம் தலத்திற்கு மற்றுமோர் சிறப்பும் உன்டு. ”பேரருளாளன்” என போற்றப்படும் காஞ்சி வரதராஜ பெருமாள் ஆதியில் அத்தி மரத்தால் ஆன மூலவராக அருள்பாலித்து வந்தார். பின்பு கால ஓட்டத்திலோ அல்லது அன்னிய்ர் படையெடுப்பின் போதோ அந்த அத்தி வரதர் சிலை பின்னம் (சேதம்) ஆகியுள்ளது. வேறு சிலை நிறுவ நினைத்த பெரியோர்கள் இந்த பத்மகிரியில் இருந்து தான் தற்போதுள்ள வரதராஜர் சிலையை செய்து காஞ்சி எடுத்து சென்று பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றார்கள்.
 இந்த மண்டபத்தில் தான் வரதராஜர் தங்குவார்

தான் பழைய சீவரத்தில் இருந்து வந்த வரலாற்றை நினைவு கூறும் வகையிலே தான் காஞ்சி வரதர் ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வோர் வருடமும் மாட்டு பொங்கல் தினத்தன்று “பார் வேட்டை” அல்லது பரிவேட்டைக்கு இந்த ஊரில் வந்து தங்குவார். பார் வேட்டை என்பது ”துஷ்ட நிக்ரஹம்” எனப்படும் தீமை ஒழிப்பை நினைவூட்டுவதாகும்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர்


இந்த தலத்தின் அருகிலேயே ஆற்றின் மறு கரையில் “திரு முக்கூடல்”என்னும் தலமும் “அப்பன் வேங்கடேச பெருமாள்” கோவிலும் உள்ளன.இதுவும் மிகவும் முக்கியமான திருக்கோவில்.

தேடல் தொடரும்........

குறிப்பு:- அர்சை என்பது ஸ்ரீமன் நாராயனன் சிலை வடிவில் பூலோகத்தில் காட்சி அளித்து அருள்வது.

3 comments:

Unknown said...

Nice presentation. I too interested to visit this temple. Planning to visit the temple in the pongal festival. Thanks for sharing your experience and information.

Regards,
Pallavan

Ariyaa Siruvan said...

Thank U Pallavan for the Comment, Since you are a Pallava you must visit this temple which is located in your region

வல்லிசிம்ஹன் said...

எங்கள் வீட்டில் முக்கியமாக வழிபடப் பெருமாள் லக்ஷ்மிநிருசிம்ஹன்.
எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு பக்தி விஷயமாகப் பாடம் சொல்லும் குரு எங்களைப் பழைய சீவரம் சென்று விட்டு வரச் சொன்னார். அதிலிருந்து அங்கே சென்று அந்தப் பெரிய பெருமானைக் காண்பது வழக்கம் ஆகிவிட்டது.
அருமையான இடம். அமைதியரும் தாயாரும் நரசிங்கனும்.
எழுதி எல்லோருக்கும் வழி காட்டியதற்கு மிகவும் நன்றி.

Post a Comment