Monday, December 27, 2010

தென்னகத்தின் திரிவேனி சங்கமும் திரிமூர்திகளும்- திருமுக்கூடல்

திருமுக்கூடல்

திரிவேனி சங்கமம், இது வட இந்தியாவின் அலகாபாத் நகரில் அமைந்துள்ள ஒரு புண்ணிய க்ஷேத்திரம். இந்தியாவின் முக்கிய புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கையும் யமுனையும் சரஸ்வதி நதியுடன் கலக்கும் இடம். கங்கையும் யமுனையும் கலப்பது கண்களுக்கு தெரிந்தாலும் சரஸ்வதி நதி கண்களுக்கு தெரியாது. சரஸ்வதி நதி உள் முகமாகவே சங்கமிப்பதாக நம்பிக்கை.

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களின் ஒன்றான காஞ்சி மாநகரின் அருகே அமைந்திருக்கும் கிராமம் திருமுக்கூடல். செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் வாலாஜபாதிற்கு சில கிலோமீட்டர்கள் முன் அமைந்துள்ள பழைய சீவரம் அருகே அமைந்துள்ளது இந்த திருமுக்கூடல். திருமுக்கூடல் என்ற பெயரிலேயே நமக்கு விளங்குவது இங்கே ஏதோ மூன்று விஷயங்கள்
கூடுகின்றன என்பது.


ஆலய முகப்பு

 மண்டபமும் கொடிமரமும்
ஆம் இங்கே கூடுவது ”பாலாறும்” அதன் கிளை நதிகளான ”செய்யாறும்” ”வேகவதியும்”. வட திரிவேனி சங்கமம் போல் இல்லாமல் இங்கே மூன்று நதிளும் கண்களுக்கு தெரிவது சிறப்பு. இதை தவிர இன்னொறு முக்கூடலும் இங்கே சிறப்பு. பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் முக்கூடல்.

இந்த திருமுக்கூடல் கிராமத்தின் வெளியே ஆற்றின் கரையில் இந்திய தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் அமைந்திருப்பது அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோவில். திருமால் நின்ற நிலையில் சங்கு சக்கரங்களோடு சுமார் 7-8 அடிகள் உயரத்தில் மார்கண்டேயரும் பூமாதேவியும் மண்டியிட்டு வணங்கி இருக்க திருக்குடந்தை அருகில் அமைந்துள்ள ஒப்பிலிஅப்பனை நினைவுபடுத்தும் தோற்றத்தில் அருள் பொங்க அமைந்துள்ளார்.
 ஆலய விமானம்


ஆலய சுவர்களில் கல்வெட்டுகள்

இந்த பெருமாள் மார்கண்டேயருக்கு ரங்கநாதராக, பூமாதேவிக்கு கண்ணனாக, தொண்டமான் சக்கரவர்த்திக்கு திருப்பதி வெங்கடேசராகவும் காட்சி கொடுத்தாராம். தொண்டமான் சக்கரவர்த்தி திருப்பதி பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டு தனது அரசை மகனிடம் தந்துவிட்டு, திருப்பதி செல்ல நினைக்கிறார். ஆனல் பெருமாள் அவரது கனவில் தோன்றி நீ அவ்வாறு செய்ய வேண்டாம் உன் ராஜ்ஜியத்தின் மேல் படையெடுப்பு நடக்க போகிறது ஆதலால் நீ உன் மகனுடன் சேர்ந்து போரிட்டு வென்று பிறகு இங்கு வருவாய் என சொல்கிறார்.

தொண்டமான் சக்கரவர்த்தியோ பெருமாளே நீ தான் எனக்கு எல்லம் ஆதலால் நான் உன்னிடமே வருவேன் என புறப்படுகிறார், தன் பக்தனை காக்கும் பொறுட்டு பெருமாள் தனது சங்கு சக்கரங்களை அனுப்பி எதிரிகள் படையெடுப்பை முறியடிக்கிறார். பக்த்தனுக்காக அனுப்பப்பட்ட திருப்பதி வெங்கடேசனின் சங்கு சக்கரங்களும் திருமுக்கூடலிலேயே தங்கிவிட்டன. திருமலைக்கு வந்த தொண்டமானை திருமுக்கூடலுக்கு சென்றால் அங்கே மோட்சம் அளிப்பதாக செல்கிறார் திருமால்.
ஆலயத்தை சுற்றி

திருமுக்கூடலுக்கு வந்த தொண்டமானுக்கு அதுவரை ரங்கநாதராக சயன கோலத்தில் காட்சி அளித்துகொண்டிருந்த பெருமாள் நின்ற வன்னம் வெங்கடேச பெருமாளாக காட்சியளித்தார். இதை கண்டு நெகிழ்ந்து போன தொண்டமான் பெருமாள ஆரத்தழுவிகொண்டு அப்பனே வெங்கடேசா என மகிழ்ந்தார். இதனால் இப்பெருமாளுக்கு அப்பன் வெங்கடேச பெருமாள் என பெயர் வந்தது.

பாலாறூம் தூரத்தி தெரிகின்ற பழைய சீவரம் கோவிலும்

இனி எவ்வாறு இங்கே திருமூர்த்தி சங்கமம் என்பதை பார்ப்போம். இங்கே பெருமாளுக்கு சிவ பெருமானை போல ஜடாமுடியும் நெற்றிகண்ணும் உள்ளன. ஜட முடியை தரிசிக்க கார்திக மாதத்தில் கிரிடத்தை நீக்கி எண்ணை காப்பு சாற்றும் போது பார்க்கலாம், திருநாமாம் எப்போதும் மறைத்திருப்பதால் நெற்றிக்கண் தரிசனம் இயலாதது.
ஆற்றின் நடுப்பகுதியிலிருந்து ஆலயம்

சங்க சக்ர தாரியாக, திருமகள் உறை மார்பனாக இருப்பதால் திருமால். வலது திருக்கையில் பத்மம் வைத்துள்ளதாலும் தாமரை மலர் மேல் நின்றிருப் பதாலும் பிரம்மா. ஆக மும்மூர்த்தி ஸ்வரூபம். 63நாயன்மார்களில் ஒருவரான அப்பர் இந்தப்பெருமாளை பற்றி பாடியுள்ளார் என்பது சிறப்பு.

பார் வேட்டைக்கு பழைய சீவரம் வரும் காஞ்சி வரதர், லக்ஷ்மி நரசிம்மருடன் சேர்ந்து இந்த திருத்தலதிற்கும் வருவது மற்றுமோர் சிறப்பு.


அப்பன் வெங்கடேச பெருமாள்


பழைய சீவரம் வரும் அன்பர்கள் அனைவரும் தவறாது தரிசிக்க வேண்டியதலம் இது.


அப்பன் வெங்கடேசன் திருவடிகளே சரணம்.

2 comments:

Ponmudi Natarajan said...

nice one.. thanks..

Ponmudi Natarajan said...

அப்பன் வெங்கடேசன் திருவடிகளே சரணம்.

Post a Comment