சமீபத்திய மணிமங்கலம் பதிவில் குறிப்பிட்டிருந்த திரு ரவி அவர்களில் கோவில் பற்றிய விளக்கங்கள் அவரது குரலிலேயே தனது செல் பேசி மூலம் திரு ரவியின் பேச்சை பதிவு செய்து தந்த தம்பி கண்ணனுக்கு நன்றிகள். ஒலி தரம் சுமாராகத்தான் இருக்கும் ஒலிப்பானின்(Speaker) ஒலியை அதிகரித்து கொண்டு கேட்கவும்
Thursday, October 28, 2010
மணிமங்கலம்- திரு ரவி அவர்கள் விளக்கம்(ஆடியோ)
சமீபத்திய மணிமங்கலம் பதிவில் குறிப்பிட்டிருந்த திரு ரவி அவர்களில் கோவில் பற்றிய விளக்கங்கள் அவரது குரலிலேயே தனது செல் பேசி மூலம் திரு ரவியின் பேச்சை பதிவு செய்து தந்த தம்பி கண்ணனுக்கு நன்றிகள். ஒலி தரம் சுமாராகத்தான் இருக்கும் ஒலிப்பானின்(Speaker) ஒலியை அதிகரித்து கொண்டு கேட்கவும்
Wednesday, October 27, 2010
காண கிடைக்காத பெருமான்.
காண கிடைக்காத பெருமான்
ரமனா சரணம் சரணம். இது ”இசைஞானி” என உலகம் புகழும் உன்னத கலைஞன் அருணமலை குரு ரமனன் மீது கொண்ட மட்டற்ற அன்பினால் எழுதி இசை அமைத்து படிய பாடல்களின் தொகுப்பு. முற்றிலும் தன் செலவிலேயே இந்த இசை தொகுப்பை தயாரித்து ரமனாஸ்ரமத்திற்க்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் இளையராஜா. ரமனாஸ்ரமும் இந்த இசை தொகுப்பை மிகவும் குறைந்த விலைக்கே(ஐம்பது ரூபாய்) விற்பனை செய்கின்றார்கள். இதன் ஒவ்வொரு பாடாலும் ஆழ்ந்து கேட்க்கும் போது அமைதியான மன நிலைக்கு நம்மை ஆழ்த்தும்.
மொத்தம் 10 பாடல்கள், ஒரு பாடல் “பாபநாசம் சிவன்” பாடலான ”எப்படி பாடினாரோ” மெட்டில் இளையராஜ வரிகளில் பாடபட்டுள்ளது. ஒரு பாடல் தெலுங்கு கீர்த்த்னைபாக உள்ளது. தன் மகள் பவதாரிணியுடன் சேர்ந்து “ஆராதருமருந்து” என்று ஒரு பாடல் பாடியுள்ளார் ராஜ, அழகான பாடல்.
”பரம் பொருள் தானோ அருணாசலம்” என்ற பாடல் சென்ற ஆண்டு வெளி வந்த “நான் கடவுள்” படத்தின் தொடக்கத்தில் வரும் ”மா கங்கா” என கங்கையின் புகழ் பாடும் பாடல் மெட்டில் உள்ளது. படத்தில் வந்த பாடல் முந்தையதா அல்லது இந்த இசை தொகுப்பு முந்தையதா என தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இசை இளையராஜா தானே.
”நீங்க அண்ணாமலைக்கு” என்ற பாடலில் இன்றைய சாமியார்களின் லட்ச்சனம் பற்றி சொல்லி இருப்பார், உன்மையான குரு எப்படி இருப்பார் என்பதையும் பதிவு செய்துள்ளார்.
”மாயையில் ரமண மாயன்” பாடல் வஞ்ச புகழ்ச்சி போல அமைந்துள்ளது. இந்த தொகுப்பில் எனது மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றை மட்டும் இங்கே தருகிறேன். அந்த பாடலானது :
காண கிடைக்காத பெருமான்
காண கிடைக்காத பெருமான் ரமனன், கண்கள் கொண்டு கண்டாலும், கோடி கண்கள் கொண்டாலும்,
காண கிடைக்காத பெருமான் ரமனன்,
கருத்தினில் இருத்தி கருதி கருதிட கருத்தழிப்பான்
கருத்தழிந்தே போனால் காண் பொருளும் ஏது காண்பானும் தான் ஏது
காண் பொருளும் காண்பானும் அவனாகும் வேறன்றி அறிவு விழி திறந்து அதன் மூலம் கண்டாலும்
காண கிடைக்காத பெருமான் ரமனன்,
அரியோடு பிரம்மனும் அடி முடிதனை தேடி அடங்க வைத்தான்
அவர்காக அவன் இறங்கி ரமன வேடம் கொண்டு அடி முடி காண் என்றான்.
கை தொழுது கண்டாலும் கானும் அவன் மெய்யாமோ
பொய் வேடம் மூலம் நம்முள் மெய் காட்டும் மெய்யன் அவன்
காண கிடைக்காத பெருமான் ரமனன்,
காண கிடைக்காத பெருமான் ரமனன், கண்கள் கொண்டு கண்டாலும், கோடி கண்கள் கொண்டாலும்,
காண கிடைக்காத பெருமான் ரமனன்.
-------------------------------------------------
பாடல் தொகுப்பை அனைவரும் கேட்டு அருளானந்தத்தை அடைய வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.
Sunday, October 24, 2010
1500 ஆண்டுகள் பழமையான மணிமங்கலம்
மணிமங்கலம் மாயோன் - 2
கோவில் முகப்பு
ஆனந்த் குறிப்பிட்ட அந்த இயற்கை எழிலான இடத்தில் சில நேரம் செலவழித்து விட்டு அருகில் உள்ள மணிமங்கலம் தர்மேஸ்வரர்
கோவிலுக்கு சென்றோம். ஆனால் நேரம் ஆகிவிட்ட படியால் கோவில் பூட்ட பட்டு இருந்தது. சரி இரு முறை தரிசனம் தராத ராஜகோபாலன் இந்த முறை தரிசனம் தருவாரா என ஒரு வித சந்தேகத்துடனேயே கோவிலை நாடி சென்றோம்.
கொடிமரமும் சன்னிதானமும்
திருநாராயனன் - மேல்கோட்டே-கர்நாடகா.
மாயவன் அருள் பொங்க ஆலயத்தை திறந்து வைத்திருந்தான். அன்று விஜயதசமி, ஆலயத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவடைந்து
கொண்டிருந்தன. இந்த ஆண்டு தான் தாயருக்கு நவரத்திரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியதாக மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.ரவி (டி.வி. மெக்கனிக், இப்படித்தான் அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்) அவர்கள் தெரிவித்தார். மனதில் பரவசம் பொங்க மயவனை நோக்கி ஏரக்குறைய ஒடினேன், ஆஹா நான் கண்ட காட்சி என்னால் முழுமையாக விவரிக்க இயலாதது, இதுவே ஆழ்வார்களாக இருந்தால் “அமலனாதிபிரான்” போல ஒரு பத்து பாசுரங்கள் பாடி பகவானுடன் ஐக்கியமாகி இருப்பார்கள்.
ஆராவமுதன், மாயவன், உள்ளம் கவர் கள்வன், ஸ்ரீமன் நாராயனன், வலக்கையில் சங்கமும், இடக்கையில் சக்கரமும், வலது கரம் அபயமாகவும் இன்னொரு கையில் கதாயுதத்துடனும், மேல்கோட்டே திருநாராயண பெருமாளை நினைவூட்டும் திருக்கோலத்துடன் சுமார் ஐந்தடி அல்லது ஆறு உயரத்தில் அருள்பாலிக்கிறான். தரிசித்த மாத்திரத்தில் மனதெல்லம் நிறைவானதொரு உணர்வு. இது போன்ற உணர்வு காஞ்சி பேரருளானை(வரதராஜன்)பார்த்த போது தான் எனக்கு வந்தது.
முன் மண்டபமும் கருடன் சன்னிதியும்
தாயார் சன்னிதி
சிவன் சன்னிதிகளில் தான் சுற்று சுவர்களில் பிற தெய்வங்களின் சிலைகள்(கோஷ்ட்ட தெய்வங்கள்-தட்சினாமூர்த்தி,விஷ்ணு, துர்கை,லிங்கோத்பவர்...) பிரதிஷ்டை செய்து இருப்பார்கள். இந்த பெருமாள் சன்னிதனத்தில் அதிசயமாக கோஷ்ட்ட தெய்வங்கள் அமைக்கபட்டிருக்கின்றன அதுவும் வித்தியாசமாகஒரு பெரிய சிலை அதன் மேல் பகுதியிலே ஒரு சின்ன தெய்வ வடிவம். இடமிருந்து வலம் வரும்போது முதலில் இருக்கும் தெய்வம் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் கணபதி, அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே தட்சினாமூர்த்தி. அடுத்து ப்ரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் மஹாவிஷ்ணு அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே கையில் வெண்ணை வைத்துக்கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடும் நவனீதகண்ணன். மேற் சொன்ன இரு தெய்வங்களும் சன்னிதானத்தின் தெற்க்கு சுவற்றில். பின்புற சுவற்றில் மறுபடியும் ப்ரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் மஹாவிஷ்ணு அவர் தலைக்கு மேல ஒரு சிறிய வட்ட வடிவத்தின் உள்ளே யோக நரசிம்மர்.
ஆண்டாள் சன்னிதி
நல்லாட்டூர் வீர ஆஞ்சநேயர்
சன்னிதானத்தின் எதிரே சற்றே வடகிழக்கில்(சனி மூலை?) சுமார் 2.5-3 அடி உயரத்தில் வீர ஆஞ்சனேயர். இந்த ஆஞ்சனேயர் திருத்தணி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள நல்லாட்டூரில் அருள் பாலிக்கும் ஆஞ்சனேயர் தோற்றத்திலேயே உள்ளார். ராஜகோபாலனை போலவே இந்த ஆஞ்சனேயரும் மிகவும் சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார்.
ஆலய மணியும் கோவில் சுவர் கல்வெட்டும்
யதிராஜர் ராமானுஜர்
சரியாக வட கிழக்கு மூலையில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சந்நிதி. சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், யதிராஜர் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் அருள்கின்றனர். மணிமங்கலத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருபெரும்பூதூரில் பிறந்த வைணவ குல திலகம், அடியார்களின் அரசர், யதிராஜர் ராமானுஜர் இந்த திரு தலத்திற்க்கு அவரது காலத்தில் வந்து வழிபட்டபோது மாயவன் அவருக்கு ராஜகோபாலனாக காட்ச்சி அளித்ததாகவும் அப்போதிலிருந்து இந்த இறைவன் ராஜகோபலானக அழைக்கபடுவதாகவும் கோவிலும் ராஜகோபலா சுவாமி கோவில் என அழைக்க படுவதாகவும் செவி வழி செய்தி. இந்த செய்தி மற்றும் சன்னிதனத்தில் இருக்கும் கல்வெட்டு இவற்றை கொண்டு பார்க்கும் போது இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானதாக(தஞ்சை பெரிய கோவிலைவிடவும்) இருக்கவேண்டும் என தெரிகிறது. பெரியார் மழலையர் தொடக்க பள்ளியும் ஆலயமும்
அறிவும் ஆன்மீகமும்
இந்த கோவிலை பற்றியும், மணிமங்கலம் கிராமத்தை பற்றியும் சுமார் 2 மணி நேரம் மிகவும் அழகாகவும், பல்வேறு விஷயங்களையும் மேற்கோள் காட்டியும் பொறுமையுடன் விளக்கி சொன்ன திரு.ரவி அவர்களுக்கு நான் எவ்வளவு நண்றிகள் சொன்னாலும் பத்தாது. இன்னும் இரண்டு பெருமாள் கோவில்களையும் சிவாலயங்களையும் தரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவற்றை பற்றியும் எழுதுவேன். சென்னைக்கு அருகே இருக்கும் அனைவரும் ஏன் உலகில் இருக்கும் அனைவருமே வந்து இயற்கை எழிலை ரசித்தும் இறைவன் அருளைய பெற்றும் மகிழ்ந்திக்க வேண்டும்மாறு ராஜகோபாலன் அருள்வானாக.
குறிப்பு: - சென்னை தம்பரத்தில் இருந்து 55N(தமிழ்நாடு அரசு பேருந்து), 583c(மாநகர பேருந்து) ஆகிய பேருந்துகள் மணிமங்கலம் செல்லும்,
மணிமங்கலத்தில் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கே விசாரித்தாலேயே கோவிலுக்கு வழி சொல்வார்கள், நடக்கும் தூரம் தான்.
மணிமங்கலத்து மாயவன்-1
மணிமங்கலம், சென்னை தாம்பரம் அருகே அமைந்துள்ள அழகான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர் கிராமம். ஏழாம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்கள் சாளூக்கியர்களோடு போரிட்ட இடம். கல்கி அவர்களின் ”சிவகாமியின் சபதம்” புத்தகத்தில் கூட குறிப்பிட பெற்றிருக்கும்(மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்-முப்பத்தோராம் அத்தியாயம் - புலிகேசி ஓட்டம்- மணிமங்கலம் போர்க்களத்தில் மகேந்திர பல்லவரின் சிறு படை, அடியோடு நாசம் செய்யப்படவிருந்த தறுவாயில், மாமல்லரும் பரஞ்சோதியும் பாண்டியனைப் புறங்கண்ட குதிரைப் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் போர் நிலைமை அடியோடு மாறி விட்டது. சளுக்க வீரர் பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர்.).
இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மணிமங்கலத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் ஆறு. மூன்று சிவன் கோவில்கள் மூன்று பெருமாள் கோவில்கள்.
தர்மேஸ்வரர், கைலாசநாதர்,வ்யாலீஸ்வரர் ஆகியவை மூன்று சிவன் கோவிலகள். இவற்றுள் வ்யாலீஸ்வரர் கோவில் இன்றி வெரும் லிங்கமாக மட்டும் பொதுமக்கள் எளிதில் அறிய முடியா இடத்தில் இருக்கிறார், கைலாசநாதர் கோவில் தற்போது புணரமைக்க பட்டு வருகிறது. தர்மேஸ்வரர் கோவில் ”தொல்பொருள் துறை”யினர் கட்டு பட்டில் உள்ளது. தினமும் ஒரு கால பூஜை மட்டும் அர்ச்சகரின் நேரப்படி நடக்கிறது. கோவில் மாலை 4-5 மணி அளவில் மட்டும் திறந்திருப்பதாக தகவல்
இந்த கோவிலுக்கு இது வரை 3 முறை சென்றுறிக்கிறேன், இரு முறை தரிசனம் செய்து இருக்கிறேன். இறைவன் லிங்க வடிவில் ”கஜப்ருஷ்ட்ட விமானம்” எனப்படும் ”துங்காணை மாடத்தின்” கீழ் வீற்று இருக்கிறான், மிகவும் அற்றல் நிறைந்த கோவில் என்பதால் இறைவனுக்கு எதிரில் சாளரம் அமைக்க பட்டுள்ளது. பொதுவாக கோவில்களில் வாயிலை தாண்டி கொடிமரம்,பின்னர் நந்தி, துவாரபாலகர்கள் இறைவன் சந்நிதி என இருக்கும், ஆனல் இங்கோ பலிபீடமும் நந்தியும் கோவிலுக்கு வெளியே.
பிரதான வாயில், பின்னர் சில படிகள் ஏறி ஒரு மண்டபம் மண்டபத்தின் உள்ளே நுழைந்து இடது புறம் போனால் சந்நிதி,அங்கே ஈசன். இறை ஆற்றலை நேரடியாக தங்க எல்லோராலும் முடியாது என இவ்வாறு ஏற்பாடு என தெரிவித்தனர். மிக சில கோவில்களிலேயே இத்தகைய ஏற்பாடு இருக்குமாம். இது போல நான் பார்த்த இன்னொரு கோவில் திருநீர்மலை அடிவாரத்தில் உள்ள நீர்வண்ண பெருமாள் கோவில்(திருமலை நாதன் தோற்றத்தில் இருப்பார்). இவ்வளவு ஆற்றல் வாய்ந்த தர்மேஸ்வரர், அடியார்கள் வரவின்றி தனிமையில் தொல்பொருள் துறை கட்டுபாட்டில் உள்ளார்.
இந்த கோவிலை படம் பிடித்து பிரபலப்படுத்த நினைத்த ”மக்கள் தொலைக்காட்சி” யினரையும் அங்கிருந்த தொல்பபொருள் துறை காவலாளி விரட்டியதாக ஊர் மக்கள் சொன்னார்கள்.
.
2008ம் ஆண்டு சென்றபோதும் இந்த ஆண்டு 2ம் மாதம் சென்ற போதும் பெருமாள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியவில்லை, முதல் முறை ஒரு பெருமாள் கோவில் தான் இருப்பதா தெரியும்.
ராஜகோபால ஸ்வாமி ஆலயம், முதல் முறை சென்ற போது சந்நிதிகள் பூட்டி கிடந்தன, கோவிலை மட்டும் சுற்றறி பார்த்து வந்தோம். அதன் பின்னர் எனது தாயாரின் சகோதரி அவர்கள் ஒரு முறை சென்று பெருமாளை தரித்து விட்டு புகழ்ந்த்து கொண்டிருந்தார், அவர் சொல்லி தான் அங்கே 2-3 பெருமாள் கோவில்கள் உள்ளன என்பது தெரிய வந்தது.
கேள்விப்பட்ட நாள் முதல் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற என்னம் அவ்வப்போது மனதில் வந்து கொண்டிருக்கும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீடிரென ஒரு நாள் புறப்பட்டு சென்றேன், ஆனால் தர்மேஸ்வரர் தரிசனம் மட்டுமே கிடைத்தது. மாயவன் சித்தம் வேறாக இருந்த்தது. அர்ச்சகர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார். நானும் மாயவனை காண முடியா வருத்ததுடன் திரும்பிவிட்டேன்.
தொடரும்....
குறிப்பு:- தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல சிவாலயங்கள்(மாடம்பாக்கம்,சோமங்கலம், மணிமங்கலம்...) கஜப்ருஷ்ட்ட விமானம் எனப்படும் துங்காணை மாடத்தின் வடிவிலேயே அமைக்க பட்டுள்ளன, காரணம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

கோவில் வெளிப்புறத்தோற்றம்
வெளி வாயிலும் பிரதான வாயிலும்
இந்த கோவிலுக்கு இது வரை 3 முறை சென்றுறிக்கிறேன், இரு முறை தரிசனம் செய்து இருக்கிறேன். இறைவன் லிங்க வடிவில் ”கஜப்ருஷ்ட்ட விமானம்” எனப்படும் ”துங்காணை மாடத்தின்” கீழ் வீற்று இருக்கிறான், மிகவும் அற்றல் நிறைந்த கோவில் என்பதால் இறைவனுக்கு எதிரில் சாளரம் அமைக்க பட்டுள்ளது. பொதுவாக கோவில்களில் வாயிலை தாண்டி கொடிமரம்,பின்னர் நந்தி, துவாரபாலகர்கள் இறைவன் சந்நிதி என இருக்கும், ஆனல் இங்கோ பலிபீடமும் நந்தியும் கோவிலுக்கு வெளியே.
கோவிலுக்கு வெளியே பலிபீடமும் நந்தியும்
சாளரம்
பிரதான வாயில், பின்னர் சில படிகள் ஏறி ஒரு மண்டபம் மண்டபத்தின் உள்ளே நுழைந்து இடது புறம் போனால் சந்நிதி,அங்கே ஈசன். இறை ஆற்றலை நேரடியாக தங்க எல்லோராலும் முடியாது என இவ்வாறு ஏற்பாடு என தெரிவித்தனர். மிக சில கோவில்களிலேயே இத்தகைய ஏற்பாடு இருக்குமாம். இது போல நான் பார்த்த இன்னொரு கோவில் திருநீர்மலை அடிவாரத்தில் உள்ள நீர்வண்ண பெருமாள் கோவில்(திருமலை நாதன் தோற்றத்தில் இருப்பார்). இவ்வளவு ஆற்றல் வாய்ந்த தர்மேஸ்வரர், அடியார்கள் வரவின்றி தனிமையில் தொல்பொருள் துறை கட்டுபாட்டில் உள்ளார்.
கஜ ப்ருஷ்ட்ட விமானம்-துங்கானை மாடம்
கோவிலின் சுற்று தோற்றம்
கோபுரமும் கோமுகியும்
அம்பாள் சந்நிதி(தனிக்கோவில்)
ஆலய சுவற்றில் கல்வெட்டும் தனியே நிற்கும் சிற்பங்களும்
தனியே நிற்க்கும் கல்வெட்டு
இந்த கோவிலை படம் பிடித்து பிரபலப்படுத்த நினைத்த ”மக்கள் தொலைக்காட்சி” யினரையும் அங்கிருந்த தொல்பபொருள் துறை காவலாளி விரட்டியதாக ஊர் மக்கள் சொன்னார்கள்.
2008ம் ஆண்டு சென்றபோதும் இந்த ஆண்டு 2ம் மாதம் சென்ற போதும் பெருமாள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியவில்லை, முதல் முறை ஒரு பெருமாள் கோவில் தான் இருப்பதா தெரியும்.
ராஜகோபால ஸ்வாமி ஆலயம், முதல் முறை சென்ற போது சந்நிதிகள் பூட்டி கிடந்தன, கோவிலை மட்டும் சுற்றறி பார்த்து வந்தோம். அதன் பின்னர் எனது தாயாரின் சகோதரி அவர்கள் ஒரு முறை சென்று பெருமாளை தரித்து விட்டு புகழ்ந்த்து கொண்டிருந்தார், அவர் சொல்லி தான் அங்கே 2-3 பெருமாள் கோவில்கள் உள்ளன என்பது தெரிய வந்தது.
கேள்விப்பட்ட நாள் முதல் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற என்னம் அவ்வப்போது மனதில் வந்து கொண்டிருக்கும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீடிரென ஒரு நாள் புறப்பட்டு சென்றேன், ஆனால் தர்மேஸ்வரர் தரிசனம் மட்டுமே கிடைத்தது. மாயவன் சித்தம் வேறாக இருந்த்தது. அர்ச்சகர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார். நானும் மாயவனை காண முடியா வருத்ததுடன் திரும்பிவிட்டேன்.
தொடரும்....
குறிப்பு:- தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல சிவாலயங்கள்(மாடம்பாக்கம்,சோமங்கலம், மணிமங்கலம்...) கஜப்ருஷ்ட்ட விமானம் எனப்படும் துங்காணை மாடத்தின் வடிவிலேயே அமைக்க பட்டுள்ளன, காரணம் தெரிந்தவர்கள் விளக்கவும்.
Saturday, October 23, 2010
எங்கிருந்து தொடங்குவது?
ஹரி:ஓம்.
ஆற்றலை எங்கே தேடுவது, உள்ளேயா? அல்லது வெளியேயா? அல்லது ”வெளி”யிலா? நான் வெளியில் உனர்ந்த ஆற்றல்களை பற்றி எழுதலாம் என தொடங்கி இருக்கிறேன், நல்லபடியாக எல்லம் அமைய எல்லாம் வல்ல
ஆற்றல் உதவுமாக.
முனியே நான்முகனே முக்கண்ணப்பா
என் பொல்லாக் கனிவாய் தாமரைக் கண்
கருமாணிக்கமே என் கள்வா!
தனியேன் ஆருயிரே! என் தலமிசையாய் வந்திட்டு
இனி நான் போகலுட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே
ஹரி:ஓம்
Subscribe to:
Posts (Atom)