Wednesday, November 17, 2010

ஒளஷதகிரி:ஆப்பூர்:வெங்கடேச பெருமாள்

ஆப்பூர், சென்னை சிங்கபெருமாள் கோவில்- ஒரகடம் இடையே திருக்கச்சூரை தாண்டி அமைந்துள்ள ஒரு எளிய கிராமம், அந்த கிராமத்தின் அருகே ஒரு சிறிய மலை, அந்த மலை மேலே ஒரு சிறிய கோவில், அந்த கோவிலின் உள்ளே ஒரு சிறிய பெருமாள். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பது பழமொழி. அந்த பழமொழி உன்மை என்பதை உனர இந்த கோவிலில் வந்து பெருமாளை வழிபட்டு செல்ல வேண்டும். பெருமாள் குடி இருக்கும் மலைக்கு பெயர் ”ஒளஷத கிரி”(மூலிகை மலை). பல் வேறு மூலிகைகள் நிறைந்த மலை என சொல்லபடுகிறது.பெருமாள் பெயர்
“நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்”
 மலையும் அதன் மேல் கோவிலும்

 படிகள்
ராம ராவண யுத்தத்தின் போது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர், அந்த அஸ்திர தாக்குதலில் அகப்படாமல் தப்பித்த ஒரு சிலரில் முக்கியமானவர் ஆஞ்சனேயர். அவர் ஜாம்பவானின் அறிவுறைப்படி இலங்கையில் இருந்து கடலை தாண்டி இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து நான்கு வகையான மூலிகைகளை எடுக்க செல்கிறார் மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க.

இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரனத்தால் ஹனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறான்.
 தற்போதைய படிகள்

முன் காலத்தைய படிகள் முழுவதும் இப்படி தான் இருந்தனவாம்

 அவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மற்றும் போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதி தான் இங்கு மூலிகை மலையாக இருப்பதாக சொல்கிறார்கள். அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூர்(ஆப்பூரில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது)  பகுதியில் விழுந்ததாம்.
 மலை மேல் இருந்து Palace gardens Construction

சுற்று பிரகாரம்

 முதன்முதலில் இந்த கோவிலுக்கு நான் சென்றது 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம். அதன் பிறகு 4 முறை சென்று வந்துவிட்டேன், இந்த ஆண்டிலேயே 3 முறை. சமீபத்தில் சென்ற ஞாயிறு(14/11/2010) சென்று தரிசித்து வந்தோம்.
அதற்கு சில ஆண்டுகள் முன்னதாகவே இந்த கோவிலை பற்றி பல நன்பர்கள் மூலம் கேள்வி பட்டிருந்தாலும் சென்று தரிசிக்க நேரம் வாய்க்கவில்லை. 2009 பிப்ரவரியில் தான் தம்பி கண்ணன் தூண்டுதலில் தான் முதல் முறை சென்று தரிசித்தோம்.
மண்டபமும் மலை மேல் இருந்து இயற்கை எழிலும்


பெரிய திருவடியும் சந்நிதியும்

 சுமார் 500 படிகள் ஏறி மலை உச்சியை அடைய வேண்டும். மலையில் ஏறியவுடன் நம்மை முதலில் வரவேற்ப்பது சிறிய திருவடி என போற்றப்படும் ஹனுமனின் வழித்தோன்றல்கள். இவை இந்த மலையை விட்டு அகலுவதில்லை. இந்த மலையிலேயே வசித்து கொண்டு வரும் பக்தர்கள் தரும் உனவை மட்டுமே உண்டு வாழ்வதாக சொல்கிறார்கள். முதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பு பின்னர் நேரே சென்றால் இறைவன் சந்நிதி.

தசாவதார காட்சிகள்



அஷ்ட லஷ்மிகள் இடையே திரு வேங்கடவன்

 பெரிய திருவடியின் ஒரு சிறிய சிலை பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. அந்த மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள், மற்றும் அஷ்ட ல‌ஷ்மிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம்.  பெருமாள் சந்நிதி, பெருமள் இங்கே பார்பதற்கு திருவேங்கடவனின் சிறிய வடிவு போல காட்சி அளிக்கிறார். முன்பே சொன்னது போல பெருமாள் மூர்த்தி சிறிது தான், ஆனால் பெருமானின் ஆற்றலை உனர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து தேடி வருகின்றனர்.

பக்தர்களுடன் விளையாடும் குரங்குகள்


இங்கே தனியாக தாயார் சந்நிதி கிடையாது.பட்டரின் கூற்றுபடி பெருமாள் லஷ்மி சொருபமாகவே இருப்பதால் அவருக்கு சாற்றப்படும் வஸ்திரம் புடவையே. வேறு வஸ்திரங்கள் சாற்றபடுவதில்லை.தாயாரும் பெருமாளும்
இனைந்து ஒரேவடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை, அதனால் தான் பெருமாள் பெயர் ”நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேச பெருமாள்”.

பிண்ணபடுத்த பட்ட சிலைகள்

 500படிகளையும் ஒரே மூச்சாக ஏறுவது இயலாதது, சில படிகள் ஏறி கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு மூலிகை காற்றை சுவாசிது பின்னர் படிப்படியாக ஏறினால் சிரமம் தெரியாமல் இருக்கும்.சித்தர்கள் பெளர்னமி இரவுகளில் வந்து இங்கே வழிபாடுவதாக நம்பிக்கை. பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் சாட்சியம் சொல்கிறார்கள். நான் ஒவ்வோர் முறை செல்லும் போதும் தொலை தூரங்களில் இருந்து பல பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து அவர் பெருமைகளை எடுத்துரைப்பார்கள்.
மலை அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம்

 பெருமாளால் நன்மை பெற்ற பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு பல்வேறு கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர். உதாரனமாக நான் கடந்த முறை சென்ற போது சந்தித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பக்தர் அவர் சுமார் 8-9
ஆண்டுகளாக இங்கே வருவதாகவும் அப்போதெல்லம் மலை மேல் செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவரும் இன்னும் சில பக்த்தர்களும் சேர்ந்து நடை பாதை அமைக்க முயற்சி எடுத்து பல்வேறு கால
கட்டங்களில் படிப்படியாக படி அமைத்ததை சொன்னார்.
நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்

இந்த முறை சென்னை சைதாப்பேட்டையை இரு பக்தர்கள் தாங்கள் எப்படியும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தவறாது வருவதாக கூறினார்கள். இன்னொரு பக்தர் தான் வேண்டியதை பெருமாள் நிறை வேற்றியாதால் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ஒரு புது மண தம்பதிகள் தங்கள் பிராத்தனையை நிறைவேற்ற வந்திருந்தனர்.நாடி ஜோதிடத்தில் கூட இந்த கோவிலில் பரிகரம் பரிந்துரைக்க படுவதாக தகவல் உண்டு.கோவிலை பற்றிய சரித்திர ஆதாரமோ அல்லது புராண வரலாறோ யாருக்கும் சரியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

பெருமாளின் பெருமைகளை சொற்களால் முழுவதும் சொல்வதென்பது இயலாது, அனைவரும் ஆப்பூர் சென்று பெருமானை தரிசித்து வழிபட்டு பயன் பெற வேண்டும்.  கோவிலுக்கு செல்பவர்கள் அங்கே வாழும் குரங்குகளுக்கும் ஏதேனும் உணவு எடுத்து செல்வது நல்லது. தமக்கும் அவர்கள் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது, ஏனெனில் 500 படிகள் ஏறும்போது களைப்படைவது நிச்சயம். நினைக்கும் அனைவருக்கும் நிச்சயம் அருள்வான் நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேசன்.


குறிப்பு:- கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் அவர்களை தொடர்பு கொள்ள செல்பேசி என் 9444142239.

பதிவில் உள்ள படங்கள் பல் வேறு கால கட்டங்களில் எடுக்க பட்டன.